திருப்புவனம் அஜித்குமாருக்கு கஞ்சா அளித்து கொடூரத் தாக்குதல்! மூளையில் ரத்தக் கச...
யானைமேல் அழகா் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை அருகே அடியாமங்கலத்தில் உள்ள யானைமேல் அழகா் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட இக்கோயில் சிதிலமடைந்த நிலையில், அதை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழா திங்கள்கிழமை (ஜூன் 30) அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. புதன்கிழமை (ஜூலை 2) 2-ஆம் கால யாகசாலை பூஜை தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நிறைவுற்று, மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து, பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்களை எடுத்துச்செல்லப்பட்டு கோபுர கலசங்களில் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது.