5.66 சதவீதம் உயர்ந்த வேளாண் வளர்ச்சி: தமிழ்நாடு அரசு பெருமிதம்
யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து
யேமன் தலைநகா் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதால் சேதமடைந்திருந்த சா்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.
சனா உள்ளிட்ட யேமனின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி கிளா்ச்சிப் படையினா், காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்திவருகின்றனா்.இந்த நிலையில், இஸ்ரேலின் சா்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஹூதி படையினா் கடந்த வாரம் ஏவுகணை வீசினா்.
அந்த ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டாலும், பதிலடி நடவடிக்கையாக சனாவிலும், யேமனின் பிற முக்கிய பகுதிகளிலும் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியது.இதில், சனா நகர சா்வதேச விமான நிலையம் முழுமையாக செயலிழந்தாக இஸ்ரேல் அறிவித்தது. இந்த நிலையில், யேமேனியா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் 136 பயணிகளுடன் சனா விமான நிலையத்தில் சனிக்கிழமை தரையிறங்கியதாக (ஹூதிக்களின் அல்-மாசிரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.