செய்திகள் :

யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளி தலைமறைவு!

post image

ஹரியாணாவில் 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா ரோட்டாக் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வந்த யோகா ஆசிரியர் ஜக்தீப் (45). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர் சென்ற பகுதிகளின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர் முக்கியக் குற்றவாளி ராஜ்கரண் என்பவரின் கூட்டாளிகள் இருவரைக் கைது செய்தனர்.

அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் உண்மை தெரிய வந்துள்ளது.

ராஜ்கரணுக்கு சொந்தமான வீட்டில் ஜக்தீப் முன்பு வாடகைக்கு தங்கியிருந்தார். அப்போது, ராஜ்கரணின் மனைவியுடன் அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தகாத உறவில் இருப்பதைக் ராஜ்கரண் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால், கோபம்கொண்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் ஜக்தீப்பை ஆட்கள் வைத்து கடத்தினார். ஜக்தீப்பின் வாய், கை, கால்களை கயிற்றால் கட்டி ’சர்க்கி தத்ரி’ என்ற பகுதிக்கு அவரைக் கடத்திச் சென்றனர்.

அங்கு ஆள்நடமாட்டமில்லாத மணல் பகுதியில் 7 அடி ஆழத்தில் குழி தோண்டி அவரை உயிருடன் புதைத்ததாகக் குற்றவாளிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் ராஜ்கரண் உள்பட 4 பேர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

கைதான குற்றவாளிகள் கொடுத்தத் தகவலின்படி காவல்துறையினர் ஜக்தீப்பை புதைத்த இடத்துக்குச் சென்று நீண்ட தேடுதலுக்குப் பிறகு அவரது உடலை தோண்டியெடுத்தனர்.

தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான ராஜ்கரணை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க | சிறார்கள் ஊக்க பானங்கள் அருந்தத் தடையா? பஞ்சாப் அரசு ஆலோசனை!

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்: நிதின் கட்கரி

தாணே: ‘2030-இல் மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும்... மேலும் பார்க்க

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு

புது தில்லி: இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, டிசம்பரில் 64,870 கோடி டாலராக இருந்த நாட்டின் அந்நிய கடன் ஒரே ஆண்டில் 10 ... மேலும் பார்க்க

கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்: சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம்

பிலாஸ்பூா்: கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள பெண்களைக் கட்டாயப்படுத்துவது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்று சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

வேட்டையாடப்படும் இந்தியக் கல்வி முறை: மத்திய அரசு மீது சோனியா விமா்சனம்

புது தில்லி: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி கடுமையாக விமா்சித்துள்ளாா். ‘மத்தியில் அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், வகுப்புவாதமயமா... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாா்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயாா் நிலையில் மத்திய அரசு உள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெர... மேலும் பார்க்க