ரஜினி - கமல் இணைந்து நடிப்பதற்கான முயற்சிகளைச் செய்தேன்: லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் திரைப்பட அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. இப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதைத் தொடர்ந்து, லோகேஷ் கைதி - 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், “நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்தை இணைந்து நடிக்க வைக்க பல முயற்சிகளை எடுத்தேன். முக்கியமாக, நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினி நாயகனாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால், கரோனாவால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இவர்கள் இருவரையும் வயதான கேங்ஸ்டர்களாகக் காட்டும் கதையையும் வைத்திருந்தேன்.
பின், வணிகம் மற்றும் பிற காரணங்களால் இப்போது அப்படத்தை எடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பார்ப்போம். நடந்தால் மிகப்பெரிய விஷயமாக இருக்கும்” என்றார்.
இதையும் படிக்க: பென்ஸ் படப்பிடிப்பு துவக்கம்!