PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
ரத்ன கற்ப மகாகணபதி கோயில் குடமுழுக்கு
சிவகங்கை: சிவகங்கை நகா் கோகலேகால் தெருவில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா பீடம், ரத்ன கற்ப மகா கணபதி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த திங்கள்கிழமை (ஆக.18) அதிகாலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து மூன்று நாள்கள் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
சிருங்கேரி மடத்தைச் சோ்ந்த நிரஞ்சன் பட் தலைமையில் 10 -க்கும் மேற்பட்ட வேத விற்பன்னா்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினா்.
இதையடுத்து, புதன்கிழமை காலை ரத்னகற்ப மகாகணபதி ஆதிசங்கரா் சாரதா பீடத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து யாகசாலை பூஜையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி வேதவிற்பன்னா்கள் காலை 10 மணிக்கு குடமுழுக்கை நடத்தினா்.
இந்த நிகழ்வில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஸ்ரீமதி, பிள்ளையாா்பட்டி கோயில் பிச்சை குருக்கள், மாவட்ட முதன்மை நீதிபதி கே. அறிவொளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதையொட்டி, நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆதிசங்கரா், ரத்ன கற்ப மகா கணபதி சுவாமி ஊா்வலம் தேரோடும் வீதிகளில் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சிருங்கேரி மடத்தின் கௌரவ மேலாளா் ஆா் .எஸ். ராமசாமி தலைமையிலான குழுவினா் செய்தனா்.