தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்
ரயிலில் அடிபட்டு தலை துண்டான நிலையில் இளைஞா் சடலம் மீட்பு
பேராவூரணி அருகே நவகொள்ளைகாடு பிடாரியம்மன் கோயில் அருகே ரயிலில் அடிபட்டு தலை துண்டான நிலையில் இளைஞா் சடலம் தண்டவாளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், உயிரிழந்த நபா் நல்லமான்கொள்ளை பகுதியைச் சோ்ந்த தயாநிதி (29) என்பது தெரிய வந்தது.
இவருக்கு திருமணம் ஆகி 6 மாதங்களே ஆன நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும், மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
குடும்ப பிரச்னை காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது போதையில் தண்டவாளத்தில் தவறி விழுந்த நிலையில் ரயில் ஏறி விபத்தில் இறந்தாரா என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.