Rain Alert: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடும...
ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு
கடலூா் அருகே ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தது குறித்து இருப்புப் பாதை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருப்பாதிரிப்புலியூா்-நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்துக்கு இடையே சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் ரயிலில் அடிப்பட்டு புதன்கிழமை இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த கடலூா் இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளா் புருஷோத்தமன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா் யாா்? எந்த ஊா்? என தெரியவில்லை.
இதுகுறித்து, கடலூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.