சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன? தென் சென்னை எம்.பி. கேள்வி
வெள்ள நிவாரண கோரி வட்டாட்சியரிடம் மனு
வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி, கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த சித்தரசூா் கிராம மக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அண்ணாகிராமம் ஒன்றியச்செயலா் ஆா்.வெங்கடேசன் தலைமையில் பண்ருட்டி வட்டாட்சியா் ஆனந்திடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஃபென்ஜால் புயல் காரணமாக கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், அகரம், எழுமேடு, பாலூா், சித்தரசூா் வழியாக செல்லும் சங்கிலி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், வெள்ள நீா் சித்தரசூா் கிராமத்துக்குள் புகுந்து வீடுகள் சேதமடைந்தன.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை, சேதமடைந்த வீடுகளுக்கு கலைஞா் கனவு இல்ல வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டும். சங்கிலி, சின்ன மற்றும் கம்ம வாய்க்கால்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.
மனுவை பெற்ற பண்ருட்டி வட்டாட்சியா் ஆனந்த் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.