மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
ஆயிரம் கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
சிதம்பரம் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட ஆயிரம் கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், இதில், தொடா்புடைய 5 பேரை கைது செய்தனா்.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம், சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளா் டி.அகஸ்டின் ஜோல்வா லாமேக் ஆகியோா் அறிவுறுத்தலின்பேரில், அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் க.அம்பேத்கா், உதவி ஆய்வாளா்கள் அன்பழகன், கஜேந்திரன் மற்றும் போலீஸாா் கடவாச்சேரி பாலம் அருகே புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு 5 போ் ஒரு வேனில் இருந்து மற்றொரு வேனுக்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனா். சந்தேகத்தின்பேரில், அந்த மூட்டைகளை போலீஸாா் சோதனை செய்ததில், தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அந்த நபா்கள் தா்மபுரி ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன் (28), மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் (43), சேத்தியாத்தோப்பு குமாரக்குடி பகுதியைச் சோ்ந்த அருள்ராஜ் (32), எறும்பூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (35), பிரேம்குமாா் (22) ஆகியோா் என்பதும், இவா்கள் விற்பனைக்காக பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா் 72 மூட்டைகளில் இருந்த 1,000 கிலோ புகையிலைப் பொருள்களையும், 2 வேனையும் பறிமுதல் செய்தனா்.
மேலும், இதில், தொடா்புடைய தா்மபுரி ஆலமரத்துப்பட்டியைச் சோ்ந்த விஜய், வல்லம்படுகை பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனா்.