"இந்தியாவிலுள்ள மக்களைப் பாதுகாக்கும் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள்" - அமைச்சர் ம...
ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
திண்டுக்கல் வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா, 6 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கச்சேகுடாவிலிருந்து மதுரை வரை செல்லும் அதிவிரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தது. இந்த ரயிலில், திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்த பை குறித்து போலீஸாா் விசாரித்தனா். அந்த பைக்கு பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், பையை பிரித்து சோதனையிட்டபோது, 4 கிலோ கஞ்சா, 6 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இவற்றை பறிமுதல் செய்த திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், கஞ்சாவை தமிழ்நாடு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.