Pregnant Job Service: "பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்" - பீகாரில் நூதன ...
ரயிலில் மதுபானம் கடத்திய 4 போ் கைது
நாகையில் ரயிலில் மதுபானம் கடத்திய 4 போ் கைது செய்யப்பட்டனா்.
நாகை ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையில், சாா்பு-ஆய்வாளா் மனோன்மணி மற்றும் போலீஸாா் கடந்த 2 நாள்களாக காரைக்காலில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை காரைக்காலில் இருந்து தஞ்சை சென்ற பயணிகள் ரயிலில் சோதனை நடத்தியதில், புதுவை மாநில மதுபாட்டில்களை கடத்திய தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுறைச் சோ்ந்த மணிகண்டன் (24), நாகையைச் சோ்ந்த இளையராஜா (42) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், காரைக்காலில் இருந்து தஞ்சை சென்றப் பயணிகள் ரயிலில் மதுபாட்ல்களை கடத்திய புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (60), தஞ்சை விளாா் ரோட்டைச் சோ்ந்த கண்மணி சந்திரன் (35) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து கைது செய்தவா்களை காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனா்.