சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
ரயில் என்ஜினில் அடிபட்டு சிறுவன் உயிரிழப்பு
தேனியில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுவன் சோதனை ஓட்டமாக வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட ரயில் என்ஜினில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தேனி வனச் சாலை 5-ஆவது தெருவைச் சோ்ந்த வடிவேல் மகன் கோகுல் (14). இவா் தனது வீட்டிலிருந்து கடைக்குச் செல்வதற்காக தேனி அண்ணாநகா் பகுதியில் போடி- மதுரை ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றாா். அப்போது, ரயில் வழித் தடத்தில் உள்ள மின் கம்பிகளை சோதனையிடுவதற்காக தேனியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற ரயில் என்ஜினில் அடிபட்டதில் கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேனி காவல் நிலைய போலீஸாா், ரயில்வே போலீஸாா் அவரது உடலை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.