இலங்கைக்கு கடத்த முயன்ற 3 டன் பீடி இலைகள் பறிமுதல்: ஒருவா் கைது
ரயில் கழிப்பறையில் கழுவப்பட்ட டீ கேன்! வைரல் விடியோ!
ரயில் கழிவறையில் டீ விற்கும் கேனை கழுவிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரயில் பயணம் என்பது வெறும் பயணம் மட்டும் அல்ல, பலருக்கு மறக்கமுடியாத நினைவுகளாக இடம்பெறுகின்றது. ஆனால், சமீபகாலமாக ரயிலில் பயணித்தால் கசப்பான அனுபவங்களும் நினைவுகளும் மட்டுமே மிஞ்சுகின்றன.
வந்தே பாரத் உள்பட பல்வேறு ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமற்ற வகையில் இருப்பதாக பயணிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், ரயிலின் கழிவறைக்குள் டீ விற்கும் கேனை கழும் விடியோ ஒன்று இணையத்தில் பரவி பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஆயுப் என்ற நபர் பகிர்ந்த விடியோவில், டீ விற்பனையாளர் ஒருவர் ரயிலின் கழிவறைக்குள் நின்று அங்குள்ள குழாயில் வரும் தண்ணீரால் டீ கேனை கழுவுகிறார். இதன்தொடர்ச்சியாக பிளாஸ்டிங் தண்ணீர் பாட்டிலில் இருந்த டீ-யை கேனில் ஊற்றும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இந்த காணொலி, 8 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
மேலும் லட்சக்கணக்கானோர் கண்டனங்களை பகிர்ந்து, பொதுப் போக்குவரத்தில் விற்கப்படும் உணவின் சுகாதாரத்தன்மை குறித்து ரயில்வே துறைக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த காட்சிகள் எந்த ரயிலில் எடுக்கப்பட்டது என்பது தெரியாத நிலையில், ரயில்வே துறை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.