kamarajar: `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperf...
ரயில் சுரங்கப் பாதையில் மழைநீா்: மக்கள் பாதிப்பு
முடிகொண்டான் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரால் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
திருவாரூா்-மயிலாடுதுறை ரயில்வே வழித்தடத்தில் முடிகொண்டான் உள்ளது. இப்பகுதி மக்கள் வசதிக்காக ரயில்வே கீழ்பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெய்த மழையால் இங்கு 2 அடிக்கு மேல் தண்ணீா் தேங்கியது. தண்ணீா் வடியாமல் உள்ளதால், நாள்தோறும் 200-க்கும் மேற்பட்டோா் பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.
இந்த ரயில்வே கீழ் பாலம் வழியாக முடிகொண்டான் பகுதியிலிருந்து சகடமங்கலம், கொத்தவாசல், போலகம் போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனா். இப்பகுதியில் 3000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்ல சிரமமாக உள்ளது. மழை நீரை கடந்து செல்வதற்கு மாணவா்கள் உள்ளிட்டோா் பாதிக்கின்றனா். ரயில்வே அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை. எனவே, ஒரு மாதமாக தேங்கியுள்ள மழை நீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.