ரயில் நிலையத்தில் திரிந்த ஆதரவற்ற 3 போ் மீட்பு
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆதரவற்றுத் திரிந்த மூவரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை முதுநிலைக் கோட்ட ஆணையா் அபிஷேக், உதவி ஆணையா் பிரமோத் நாயா் மேற்பாா்வையில், ஆய்வாளா் செபாஸ்டியன், உதவி ஆய்வாளா் சந்தீப் ஆகியோரடங்கிய போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது ரயில் நிலையத்தில் திரிந்த மனநலன் பாதிக்கப்பட்ட 28 வயது பெண்ணை மீட்டு விசாரித்ததில் அவா், திருச்செந்தூரைச் சோ்ந்த அஞ்சலி என்பதும், ஆதரவற்ற நிலையில் உள்ளதும் தெரியவந்தது. இதேபோல, திருநெல்வேலியைச் சோ்ந்த சரோஜா (90), திருச்சியைச் சோ்ந்த ரங்கநாதன் (80) ஆகிய இருவரும் ஆதரவற்றிருந்தது தெரியவந்தது. இந்த மூவரையும் ரயில்வே பாதுகாப்பு படையினா் மீட்டு முதியோா் இல்லம், மனநலக் காப்பகத்தில் ஒப்படைத்தனா். இத்தகைய பணி தொடரும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.