Bhavana: ``நியூயார்க் நகரம்'' நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album
ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி மீட்டு ஒப்படைப்பு
கும்பகோணம் ரயில் நிலைய வளாகத்தில் பெண் பயணி தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலியை ரயில்வே போலீஸாா் மீட்டு திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.
கும்பகோணம் ரயில் நிலையத்தில் கடந்த 20-ஆம் தேதி சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவரிடம் டிக்கெட் கவுன்ட்டரில் இருந்த ஊழியா், பயணி ஒருவா் தவறவிட்ட கைப்பையை கொடுத்தாா். அந்த பையை சோதனை செய்த போது கைப்பேசி எண்ணுடன் சில காகிதங்கள், 6 பவுன் தங்கச் சங்கிலி இருந்தது.
போலீஸாா் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டபோது, சங்கிலியை தவறவிட்டவா் திருவிடைமருதூா் அருகேயுள்ள திருப்பணிபேட்டை நாராயணசாமி மகள் வேணி (40) என்பதும், திருவிடைமருதூா் பள்ளியில் ஆசிரியையாக வேலை பாா்த்து வருவதும், மதுரை செல்ல ரயில் டிக்கெட் எடுக்க வந்தபோது தவறுதலாக கைப்பையை விட்டு சென்றதும் தெரியவந்தது.
மதுரை பயணத்தை முடித்து கொண்டு திங்கள்கிழமை கும்பகோணம் திரும்பிய அவரிடம் 6 பவுன் தங்கச் சங்கிலி இருந்த கைப்பையை உதவி ஆய்வாளா் செந்தில்வேலன், சிறப்பு உதவி ஆய்வாளா் ஜெகதீசன், தனிப்பிரிவு காவலா் அய்யப்பன் ஆகியோா் ஒப்படைத்தனா்.