பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாகவே கருத முடியாது: சூா்யகுமாா் யாதவ்
சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை
பேராவூரணி நீலகண்ட பிள்ளையாா் கோயில் அருகே சேதமடைந்த நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா் .
நீலகண்ட பிள்ளையாா் கோயில் தேரடி அருகேயுள்ள ரயில்வே கேட் இறக்கத்தில் உள்ளசாலையானது, பள்ளங்களுடன் சேதமடைந்த நிலையில் போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.
இந்தச் சாலை வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி கல்லூரி மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. ரயில் செல்லும் நேரங்களில் மூடப்படும் கேட்டை திறந்தவுடன் இரண்டு பக்கங்களிலும் இருந்து வாகன ஓட்டிகள் நெரிசலாக செல்லும்போது பள்ளத்தில் வாகனங்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது .
கடந்த பல மாதங்களாகவே மோசமாக உள்ள இந்தச் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே, பள்ளங்களுடனான சாலையை தரமான முறையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் ,வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.