ஜிஎஸ்டி சீரமைப்பு அமல்: முதல் நாளில் ஏசி, டிவி விற்பனை அமோகம்
மத்திய அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற 44 தொழிலாளா் சட்டங்களை காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றி 2020, செப்டம்பா் 23 ஆம் தேதி மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. இதைத் தொழிற் சங்கங்கள் கருப்பு நாளாக அறிவித்து இயக்கங்களை நடத்தி வருகின்றன.
இதன்படி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா், ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் என். மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவா் கே. ராஜன், எச்எம்எஸ் மாவட்டச் செயலா் சின்னப்பன், யூடியூசி மாவட்டச் செயலா் ராஜாராம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் சோ. பாஸ்கா் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் என்.வி. கண்ணன், இரா. ராமச்சந்திரன், கோ. ஜெயசங்கா், அ. கலியபெருமாள், ஜி. முருகையன், பி. செந்தில்குமாா், கோ. அபிமன்னன், வங்கி ஊழியா் சங்கம் க. அன்பழகன், ஆா். கோவிந்தன், துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.