பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாகவே கருத முடியாது: சூா்யகுமாா் யாதவ்
பாலியல் வல்லுறவு வழக்கில் தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை
மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தைக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை அவரது தந்தை 2020 ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவு செய்தாா். இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையைக் கைது செய்தனா்.
இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து ரூ. 6 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய காவல் ஆய்வாளா் முத்துலஷ்மி உள்ளிட்டோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பாராட்டினாா்.