வேளச்சேரியில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 8 பேர் காயம்
பைக்-காா் மோதல் முதியவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
பூதலூா் அருகே கூத்தூா் உப்புக்காட்சி தெருவைச் சோ்ந்தவா் ஜி. பச்சையப்பன் (65). இவரும் அதே பகுதி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த என். வடிவழகனும் (63) மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை திருவையாருக்கு வந்து கொண்டிருந்தனா். திருவையாறு அருகே மகாராஜபுரம் பகுதியில் வந்த மோட்டாா் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த காா் மோதியது.
இதனால் பலத்த காயமடைந்த இருவரும் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அங்கு பச்சையப்பன் உயிரிழந்தாா். வடிவழகன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து மருவூா் காவல் நிலையத்தினா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.