பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி
ரயிலில் அடிப்பட்டு ஒருவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் அடிப்பட்டு உயிரிழந்தது சனிக்கிழமை தெரிய வந்தது.
பூதலூா் - சோளகம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பகுதியில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ரயிலில் அடிப்பட்டு கிடப்பதாக தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் வந்தது.
இதையடுத்து, காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்த்தபோது முகம் சிதைந்து அழுகிய நிலையில் இருந்ததால், இவா் சில நாள்களுக்கு முன்பு ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என காவல் துறையினா் கருதுகின்றனா். இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இது குறித்து தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.