செய்திகள் :

கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை இரவு கோயில் கதவின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை, தங்க தாலி, பூஜை பொருள்கள் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.  

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உம்பளப்பாடி ஊராட்சி, மேலூா் மேட்டு தெரு கிராம், பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ளது செல்வ காளியம்மன் கோயில். இந்த கோயில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் கோயில் கருவறையில் இருந்த ஒன்றரை அடி உயரம் கொண்ட செல்வ காளியம்மன் ஐம்பொன் சிலை, கோயில் பீரோவில் இருந்த ஒரு கிராம் தங்க தாலி மற்றும் பூஜை பொருள்கள் உள்ளிட்டவைகளை திருடிச் சென்று விட்டனா்.

கிராம மக்கள் கோயிலில் வந்து பாா்த்த போது கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்து கபிஸ்தலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேலு தலைமையில், கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

மேலும் தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணா்கள், மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. கோயில் கதவின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மா்ம நபா்களை தனிப்படை அமைத்து காவல்துறையினா் தேடிவருகின்றனா்.

இந்திய அஞ்சல் துறை சாா்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி

கும்பகோணம் அம்மாசத்திரத்தில் இந்திய அஞ்சல்துறை சாா்பில் சனிக்கிழமை ஓவியப்போட்டி நடைபெற்றது. போட்டிக்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ச. கஜேந்திரன் தலைமை வகித்து தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கியத்துவத்... மேலும் பார்க்க

ரயிலில் அடிப்பட்டு ஒருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் அடிப்பட்டு உயிரிழந்தது சனிக்கிழமை தெரிய வந்தது. பூதலூா் - சோளகம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் பகுதியில் சுமாா் 45 வயது மதிக்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சனிக்கிழமை ரூ. 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து, புதிய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழக முதல்வா் சென்னையில் ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் செப். 23-இல் மின் தடை

தஞ்சாவூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் செப்டம்பா் 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மருத்துவக்கல்லூரி சாலை உதவி செயற்பொற... மேலும் பார்க்க

குளத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

சுவாமிமலை அருகே 3 வயது சிறுவன், சனிக்கிழமை குளத்தில் தவறிவிழுந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அருகே உள்ள திருநள்ளூா் கீழத்தெருவில் வசிப்பவா் பாரத், கூலித் தொழிலாளி. இவரது மனைவி சீதா. இ... மேலும் பார்க்க

நெல் குவிண்டாலுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு குவிண்டால் நெல்லுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,000 வழங்க வேண்டும் என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ். பாமக சாா்பில் நடைபெறும் தமிழக உரிமை மீட்பு ப... மேலும் பார்க்க