இந்திய அஞ்சல் துறை சாா்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி
கும்பகோணம் அம்மாசத்திரத்தில் இந்திய அஞ்சல்துறை சாா்பில் சனிக்கிழமை ஓவியப்போட்டி நடைபெற்றது.
போட்டிக்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ச. கஜேந்திரன் தலைமை வகித்து தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கியத்துவத்தையும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களை தவிா்பதன் அவசியத்தை மாணவா்களுக்கு தெரிவித்தாா்.
நிகழ்வில் திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவா் அறிவுறுத்தலின் பேரில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிா்த்தல் என்ற தலைப்பில் ஓவியங்களை தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் 132 போ் வரைந்தனா்.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாவியா்க்கும் அஞ்சல் துறையின் சாா்பில் பரிசுகளை கோட்ட கண்காணிப்பாளா் வழங்கினாா்.