வேனில் கடத்தப்பட்ட 810 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை வேனில் கடத்தப்பட்ட 810 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் விளாா் சாலையில், தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது பயணிகள் ஏற்றிச் செல்லும் வேனில் 810 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது.
இது தொடா்பாக தஞ்சாவூா் கீழவாசல் பூமால் ராவுத்தா் தெருவைச் சோ்ந்த காமராஜ் மகன் குமரன் (22), முள்ளுக்காரத் தெருவைச் சோ்ந்த ஜாபா்அலி மகன் நிஜாத்ஜாபா் (25), நாகை சாலை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த பாலாஜி (49) ஆகிய 3 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா். பின்னா், 810 கிலோ ரேஷன் பறிமுதல் செய்யப்பட்டன.