செய்திகள் :

ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவ தளபதி படுகொலை

post image

ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கிய தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டாா்.

தலைநகா் மாஸ்கோ அருகே காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்டுள்ள இந்தப் படுகொலை, ரஷிய அதிகாரிகள் மற்றும் போா் ஆதரவாளா்களைக் குறிவைத்து உக்ரைன் இதற்கு முன்னா் நடத்தியுள்ள படுகொலைகளைப் போன்று அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ரஷிய புலனாய்வுக் குழு செய்தித் தொடா்பாளா் ஸ்வெட்லானா பீட்டா்ன்கோ கூறியதாவது:

பாதுகாப்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு இயக்குநரகத்தில் துணை இயக்குராகப் பொறுப்பு வகித்துவந்த யாரொஸ்லவ் மாஸ்கலீக் காா் குண்டு வெடிப்பு மூலம் வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டாா்.

அவா் வசித்துவந்த பலாஷிகா புகா்ப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை அவா் கடந்து சென்றபோது, அதில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தொலைவில் இருந்து வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் அவா் உயிரிழந்தாா்.

சம்பவப் பகுதியில் இருந்து வெடிகுண்டுகளின் சிதறல்கள் சேகரிப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றாா் அவா்.

முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை வகித்துவந்த மாஸ்கலீக், போா் தொடா்பான பல்வேறு பேச்சுவாா்த்தைகளில் ரஷிய பாதுகாப்புத் துறையின் சாா்பில் பங்கேற்றுவந்தாா். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த மாஸ்கோ நகருக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு தூதா் ஸ்வீட் விட்காஃப் வந்த நாளில் இந்தப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த காா் குண்டுவெடிப்பை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதி விசாரணை நடத்திவருவதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்ததில் இருந்தே, ரஷியாவின் முக்கிய அதிகாரிகள் மற்றும் போா் ஆதரவாளா்கள் உக்ரைன் உளவுத் துறையினரால் குறிவைத்துக் கொல்லப்படும் சம்பவங்கள் தொடா்ந்து வருகின்றன.

கட ந்த 2022-ஆம் ஆண்டில், ரஷிய தேசியவாதி அலெக்ஸாண்டா் துகினின் மகளும், தொலைக்காட்சி அரசியல் விமா்சகருமான தா்யா துகினா காா் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டாா். அவரது தந்தை அலெக்ஸாண்டரைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனா்.

அதன் பிறகு, விளாத்லென் தடாா்ஸ்கி என்ற புகழ்பெற்ற ராணுவ வலைதளப் பதிவா் கடந்த 2023-ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டாா். அவருக்கு பரிசாக அளிக்கப்பட்ட பொம்மை வெடித்ததில் அவா் உயிரிழந்தாா். அந்தப் பரிசை வழங்கிய ரஷிய பெண்ணுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே ஆண்டில் ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த உக்ரைன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் இலியா கீவா, மாஸ்கோ அருகே மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது படுகொலையை வரவேற்ற உக்ரைன் ரகசிய உளவுப் பிரிவு, இலியாவைப் போன்ற தேசவிரோதிகள் அனைவருக்கும் இதே கதிதான் ஏற்படும் என்று எச்சரித்தது.

அதன் தொடா்ச்சியாக, கடந்த டிசம்பரில் மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி இகாா் கிறிலோவ் படுகொலை செய்யப்பட்டாா். அவா் கடந்து சென்ற ஸ்கூட்டரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டு இந்த படுகொலை நடத்தப்பட்டது. இதற்கு உக்ரைன் உளவு அமைப்பான எஸ்பியு பொறுப்பேற்றது. ரஷிய ராணுவத்தின் அணு, உயிரி, ரசாயன ஆயுத பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதியாக இருந்த இகாா் கிறிலோவ், உக்ரைன் போரில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக எஸ்பியு குற்றஞ்சாட்டியது.

இந்தச் சூழலில், மற்றொரு முக்கிய ரஷிய ராணுவ தளபதியான யாரொஸ்லவ் மாஸ்கலீக்கும் அதே பாணியில் படுகொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதல்: நேபாளத்தில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம்!

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து நேபாளத்திலுள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: 2 லட்சம் பேர் பங்கேற்பு

வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸ் (88) இறுதிச்சடங்கில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களும் திரண்டுள்ளனர்.சனிக்கிழமை மதியம் 1.30 மணியள... மேலும் பார்க்க

மியான்மரில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் எனக் கூறிய டிக்டாக் ஜோசியக்காரர் கைது!

மியான்மர் நாட்டில் புதிய நிலநடுக்கம் ஏற்படும் எனக் கூறி விடியோ வெளியிட்ட டிக்டாக் ஜோசியக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் டிரம்ப்புக்கு அவமரியாதையா?

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு மூன்றாவது இருக்கை அளிக்கப்பட்டது நெட்டிசன்களிடையே பேசுபொருளாகி உள்ளது.வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை ... மேலும் பார்க்க

மெலானியா பிறந்தநாளுக்கு பரிசு வாங்க நேரமில்லை.. எப்படி சமாளித்தார் டிரம்ப்?

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், தன்னுடைய மனைவி மெலானியா டிரம்ப் பிறந்தநாளை பரிசு வாங்க நேரமில்லாமல் எப்படி சமாளித்திருக்கிறார் என்பது பற்றி..மெலானியா டிரம்ப் ... மேலும் பார்க்க

தாஜ் மகாலில் குடும்பத்துடன்.. அமெரிக்க துணை அதிபர் பகிர்ந்த புகைப்படத்துக்கு எலான் மஸ்க் கருத்து!

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் பார்த்து மகிழ்ந்தார். அவர் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிய, அதற... மேலும் பார்க்க