செய்திகள் :

ராகுலின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும்; பாஜகவினர் அல்ல! சரத் பவார்

post image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டுமே தவிர, பாஜகவினர் அல்ல என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜகவினர் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக, சான்றுகளை வெளியிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சிகள், வாக்குத் திருட்டில் ஈடுபடுவதற்காக இந்த பணிகளை மேகொள்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் நேர்க்காணலில் சரத் பவார் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கும் சரத் பவார் தெரிவித்திருப்பதாவது:

“தேர்தல் ஆணையம் என்ன செய்தாலும் உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர்களை தன்னிச்சையாக சேர்க்கப்படுவது அல்லது நீக்கப்படுவது, தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை உருவாக்கிறது. இதனை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் விளைவுகள் நல்லதல்ல.” எனத் தெரிவித்தார்.

மேலும், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து சரத் பவார் பேசியதாவது:

“தேர்தல் ஆணையத்தை நோக்கி ராகுல் காந்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளார், அது தேர்தல் ஆணையம் செயல்படும் விதத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக அவரும் நாடாளுமன்ற அமைப்பில் ஒருவர். ஆகையால், அவரின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்.

ஆனால், நடப்பது என்னவென்றால், தேர்தல் ஆணையத்தின் சார்பாக பாஜக தலைவர்களும், பாஜக ஆளும் முதல்வர்களும் பதிலளித்துக் கொண்டுள்ளனர். இதன் அர்த்தம் என்ன? தேர்தல் ஆணையத்தால் கட்டமைக்கப்பட வேண்டிய நம்பிக்கை, குறைமதிப்புக்கு உட்படுத்தப்படுகிறது என்பதாகும்” எனத் தெரிவித்தார்.

Election Commission should answer Rahul's question; not BJP - Sharad Pawar

இதையும் படிக்க : ஒரே டிக்கெட்டில் பயணம்! சென்னை ஒன் செயலியைப் பயன்படுத்துவது எப்படி?

வளர்ப்பு நாயின் நகம் பட்டு உடலில் காயம்: ரேபிஸ் தொற்றால் காவல்துறை ஆய்வாளர் உயிரிழப்பு!

வளர்ப்பு நாய்கள் நகத்தால் சீண்டினாலும் ரேபிஸ் வரலாம்; ஆகவே, எச்சரிக்கை அவசியம் என்பதை அண்மையில் குஜராத்தில் நிகழ்ந்ததொரு துயர சம்பவம் எடுத்துரைக்கிறது.குஜராத் காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றிய வன்ரா... மேலும் பார்க்க

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசாம் கான் விடுதலை!

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசாம் கான் 23 மாதங்களுக்குப் பின் இன்று (செப். 23) சீதாபூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.மூத்த தலைவர் ஆசாம் கான் சீதாபூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். க... மேலும் பார்க்க

விப்ரோ நிறுவனரிடம் உதவிக் கோரும் கர்நாடக முதல்வர்!

பெங்களூரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த உதவிக் கோரி, விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். பெங்களூரின் வெளிவட்டச் சாலையில் நிலவும் ... மேலும் பார்க்க

சமூகங்களுக்கிடையே வேறுபாடுகளைக் களைய முதல்வர் முன்வர வேண்டும்: சரத் பவார்!

மகாராஷ்டிரத்தில் நடைபெறும் இடஒதுக்கீடு மோதலுக்கு மத்தியில், பல்வேறு சமூகங்களுக்கிடையேயான பிரச்னையைத் தீர்ப்பதில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலை வகிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ச... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா! மின்சாரம் பாய்ந்து 7 பேர் பலி!

கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவுமுதல் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தா... மேலும் பார்க்க

சீனா சென்ற மார்க்சிஸ்ட் கட்சிக் குழு!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் சீனா சென்றுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பன்னாட்டுத் துறையின் அழைப்பை ஏற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்... மேலும் பார்க்க