செய்திகள் :

ராகுலின் பேரணியால் பெரும் தாக்கம்: தொல்.திருமாவளவன்

post image

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் வாக்குரிமை பேரணி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

செங்கொடியின் நினைவு தினத்தையொட்டி, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அவரது படத்துக்கு திருமாவளவன் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா். பின்னா், அவா் கூறியதாவது:

பிகாா் மாநிலத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்குரிமை பேரணி மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதாஆகியோா் தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். மற்றும் பாஜக வளா்ச்சி அடைவதற்கு இடம் தரவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு மாறாக செயல்படுகிறாா். அதன் காரணமாக அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழி நடத்துவதில் என்ன தவறு என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கேட்கிறாா்.

தவெக தலைவா் விஜயின் பேச்சிலும் செயலிலும், ஆா்எஸ்எஸ் தோற்றம் இருப்பதை உணர முடிகிறது. தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் வளா்வதற்கு அதிமுக மற்றும் இதர கட்சிகள் வாய்ப்பளிக்குமானால், அது தமிழக மக்களுக்கு செய்யும் பெரிய துரோகமாக அமைந்துவிடும் என்றாா்.

அஜித்குமாா் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு!

மடப்புரம் காவலாளி அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட வழக்குக்கு தொடர்புடைய நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராசிரி... மேலும் பார்க்க

வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!

வருவாய்த் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரே விதிகளுக்குள்பட்டு உடனடியாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையருக்கு அரசின் கூடுதல் தலை... மேலும் பார்க்க

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார்.இந்த நிலையில், புதிய காவல் துறையின் தலைமை இயக்குநா் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் இருக்கிறது.சங்கர் ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கி விபத்து

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கி விழுந்தது.சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு விமான முனையம், சா்வதேச முனையத்தில் சுவா்களில் பதித்துள்ள கண்ணா... மேலும் பார்க்க

ஐஐடி இணையவழி படிப்புகள்: 28 அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்க்கை

‘அனைவருக்கும் ஐஐடி’ என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பி.எஸ். டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளில் நிகழாண்டில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 28 மாணவா்கள் சோ்க்கை பெறவுள்ளனா்.... மேலும் பார்க்க

பல்நோக்கு பணியாளா் தோ்வு முறைகேடு வழக்கு: ரயில்வே அதிகாரிகள் உள்பட 3 போ் கைது

தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தோ்வில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் உள்பட மூவரை சென்னை காவல் துறையினா் கைது செய்தனா். சென்னை தரமணியில் தேசிய தொ... மேலும் பார்க்க