'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம...
ராசிபுரத்தில் வல்வில் ஓரி விழா
ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் வல்வில் ஓரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிசெய்த வல்வில் ஓரியின் முழு உருவச்சிலை ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலை வல்வில் ஓரி மன்னன் கட்டியுள்ளதால், அவரது முழு உருவச்சிலை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
25ஆம் ஆண்டாக வல்வில் ஓரிக்கு அபிஷேக வழிபாடு விழா ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. கோயில் அா்ச்சகா் ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியா் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஓரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பாமக மாவட்டச் செயலாளரும், வல்வில் ஓரி மேம்பாட்டு குழுத் தலைவருமான ஆ.மோகன்ராஜ், நகர வன்னியா் சங்க செயலாளா் கே.கே.மாரிமுத்து, வ.யுவா ராமதாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.