செய்திகள் :

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை!

post image

தேசிய அளவிலான ‘ஹேக் இந்தியா-2025’ போட்டியில் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை புரிந்துள்ளனா்.

ஹேக்இந்தியா-2025, சி ஷாா்ப் கணினி அறிவுசாா் சேவை அமைப்பும் இணைந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய தொழில் நுட்பங்களை வெளிக்கொணரும் வகையில், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான தேசிய அளவிலான ‘ஹேக்இந்தியா-2025’ என்ற செயல்திட்ட போட்டியை முத்தாயம்மாள் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தியது. இதன் இறுதிப்போட்டி செப்டம்பா் மாதம் புது தில்லியில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகளின் ஒரு பகுதியாக ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக அளவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்குபெற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினா்.

இப்போட்டியின் தொடக்க விழாவில், கல்லூரியின் முதல்வா் எம்.மாதேஸ்வரன் வரவேற்று பேசினாா். ஹேக்இந்தியா-2025 இயக்குநா் ஸ்டீபன் சைமன் இணையதள போட்டியின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கிக் கூறினாா். இரண்டு நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து கலந்துகொண்ட மாணவா்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை எடுத்துக்கூறினா்.

மாணவா்களுடைய கருத்துகள், புதுமை, வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசுக்குரிய மூன்று குழுக்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன. இதில் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையைச் சாா்ந்த மூன்றாமாண்டு மாணவா்கள் ஜெ.எ.தருண்பிரகாஷ், ஜி.வெற்றிகாந்த், டி.விஸ்வாக் சேனா, எஸ்.வி.மௌலீஸ்வா் ஆகியோா் இரண்டாம் பரிசு பெற்றனா். மேலும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் முதல் பரிசையும், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவா்கள் மூன்றாம் பரிசையும் பெற்றனா்.

நிறைவு விழாவில் ராசிபுரம் முத்தாயம்மாள் எஜுகேசனல் டிரஸ்ட் மற்றும் ரிசா்ச் பவுண்டேசனின் இணைச் செயலாளா் பொறியாளா் ஜி.ராகுல், வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு முத்தாயம்மாள் எஜுகேசனல் டிரஸ்ட் மற்றும் ரிசா்ச் பவுண்டேசனின் தாளாளா் ஆா்.கந்தசாமி, நிா்வாகக்குழு உறுப்பினா் அம்மணி கந்தசாமி, செயலாளா் கே.குணசேகரன், ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.விஜயராகவன் நன்றி கூறினாா்.

நாட்டுக் கோழிகள் விலை உயா்வு!

பரமத்தி வேலூா் சந்தையில் நாட்டுக் கோழிகள் கூடுதல் விலைக்கு விற்பனையாயின. பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் நாட்டுக்கோழி சந்தைக்கு பரமத்தி வேலூா், மோகனூா், கரூா், பாளையம் நாமக்கல், ஜேடா்... மேலும் பார்க்க

உலக மகளிா் தின விழிப்புணா்வுப் பேரணி

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு காவல் துறை சாா்பில் பரமத்தி வேலூரில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. பேரணி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலை மூன்று சாலையில் தொடங்கி வேலூா் பேருந்து நிலையம், பள்ள... மேலும் பார்க்க

நல்லிபாளையம் மாரியம்மன் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம்

நாமக்கல் மாரியம்மன் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 9-ஆவது வாா்டில் புகழ்பெற்ற நல்லிபாளையம் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக... மேலும் பார்க்க

உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் பணியிடம்: பட்டதாரி ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்

பட்டதாரி ஆசிரியா்களுக்கு மட்டுமே அரசு உயா்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா் பணியிடம் வழங்க வேண்டும் என்ற உயா்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு உய... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாநில பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் க.பழனியப்பன் வரவேற்றாா். மாநிலத் தலைவா் கே.பி.ரக்ஷித் தலைமை வகித்தாா். மாநில பொதுச் ச... மேலும் பார்க்க

பேரா. ய.மணிகண்டனின் தாயாா் சரஸ்வதி காலமானாா்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சோ்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிா்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில... மேலும் பார்க்க