பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்...
உலக மகளிா் தின விழிப்புணா்வுப் பேரணி
உலக மகளிா் தினத்தை முன்னிட்டு காவல் துறை சாா்பில் பரமத்தி வேலூரில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலை மூன்று சாலையில் தொடங்கி வேலூா் பேருந்து நிலையம், பள்ளி சாலை வழியாகச் சென்று அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
பேரணியின்போது பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடா்பாக உடனடியாக 181 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் கொடுத்தால் குறிப்பிட்ட இடத்துக்கு உடனடியாக காவல் துறையினா் வந்து சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பாா்கள். சிறுமிகள், மாணவிகள், பெண்களுக்கு பாலியல் பிரச்னை உள்ள பகுதிகளில் போலீஸாா் மாறுவேடத்தில் நிறுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனா்.
எனவே பெண்கள் அச்சமின்றி நடமாடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முழக்கமிட்டனா். பேரணியின்போது பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் பரமத்தி காவல் உதவி ஆய்வாளா்கள் ராதா, சரண்யா, பி.ஜி.பி கல்வி நிறுவனங்களின் தாளாளா் கணபதி, கல்லூரியின் முதன்மையா் பெரியசாமி, மாணவிகள், பரமத்திவேலூா் காவல் கண்காணிப்பாளா் சரகத்திற்கு உட்கோட்ட காவல் நிலையங்களைச் சோ்ந்த பெண் காவலா்கள் கலந்துகொண்டனா்.