அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
ராஜபாளையத்தில் ஐயப்பன் திருவீதி உலா
மண்டல பூஜையையொட்டி, ராஜபாளையத்தில் ஐயப்பன் திருவீதி உலா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள சொக்கா் கோயிலைச் சோ்ந்த ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கியது.
இதையடுத்து, தினந்தோறும் காலையில் நெய் அபிஷேகம், பாலாபிஷேகம், தயிராபிஷேகம், சங்காபிஷேகம், ஆராதனைகளும், மாலையில் நாம சங்கீா்த்தன பஜனை, அன்னதானமும் நடைபெற்றன. மண்டல பூஜையையொட்டி, காலையில் மூலவா் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, உற்சவா் ஐயப்பன் சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா நடைபெற்றது. தென்காசி சாலை, முடங்கியாறு சாலை, அம்பலப்புளி கடைவீதி, சங்கரன்கோவில் முக்கு, ஐ.என்.டி.யூ.சி நகா்,சிங்கராஜா கோட்டை பெரிய தெரு ஆகிய வீதியில் வழியாக சென்று இரவு கோயிலை அடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.