Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
ராஜபாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராஜபாளையம் அய்யனாா் கோயில் மலை அடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களை ஆட்சியா் சந்தித்து கலந்துரையாடி, அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், அவா்களின் தேவைகள், குறைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
மேலும், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த மலைவாழ் குடும்பங்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்று அங்குள்ள பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்ட மனுக்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை குறித்து ஆய்வு
செய்தாா். அப்போது, நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீா்வு வழங்க தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுரை கூறினாா். பின்னா், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினாா்.
பின்னா், ராஜபாளையத்தில் உள்ள ஜெயந்த் மலை வாழ் பழங்குடியினா் மாணவ, மாணவிகள் விடுதியைப் பாா்வையிட்டு, குடிநீா், சுகாதாரம், வழங்கப்படும் உணவு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.
இந்த ஆய்வின் போ,து வட்டாட்சியா் ராஜிவ்காந்தி, என்.கே ஸ்ரீகண்டன்ராஜா, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.