செய்திகள் :

ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் காயம்!

post image

ராஜபாளையம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லையால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள ஜவகர் மைதானம் பேருந்து நிறுத்தம் மற்றும் தென்காசி சாலையில் உள்ள சொக்கர் கோயில் பேருந்து நிறுத்தம் ஆகியவற்றில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளை தெரு நாய்கள் திடீரென விரட்டி, விரட்டி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெறிநாய் கடி தடுப்பூசி

தொடர்ந்து அப்பகுதியில் தெருக்களில் நடந்து சென்றவர்களையும் தெரு நாய்கள் துரத்திச் சென்று கடித்துள்ளது. இப்படி ஒரே நாளில் 39 பேர் நாய் கடியால் காயமடைந்தது ராஜபாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் தீவிர காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து நேற்று காலை முதல் கால்நடைத்துறை உதவி இயக்குநர் ராஜராஜேஸ்வரி, நகர் நல அலுவலர் டாக்டர் பரிதா வாணி தலைமையில் ராஜபாளையம் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து வெறிநாய்கடி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.

Union Budget 2025: 'புதிய பெருமையை பெறும் நிர்மலா சீதாராமன்... இவருக்கு முன்பு யார்?!'

இந்த நிதியாண்டின் பட்ஜெட் இன்னும் சில நாள்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது.2025-2026 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீத... மேலும் பார்க்க

Union Budget 2025: 'பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்க்கும் 7 விஷயங்கள்!' - என்னென்ன?!

இந்த ஆண்டு தாக்கல் ஆகும் பட்ஜெட்டில் இவை இடம்பெறலாம் என்றிருக்கும் 7 எதிர்பார்ப்புகள்...வருமான வரி விலக்கு வரம்பு நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில் இன்னமும் அதிகரிக்கப்படலாம்.மக்கள் அன்றாடம் பயன்படுத்து... மேலும் பார்க்க

Seeman: “பெரியார் மீதான விமர்சனங்கள்; ஆதாரத்தை உரிய நேரத்தில் காட்டுவேன்" - சீமான் பதில்

கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கடலூரில் நடந்த ஒரு கட்சிக் கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் குறித்து காட்டமாக பேசியிருந்தார்.இந்தப் பேச்சு பெரியார... மேலும் பார்க்க

`எங்களை உட்காரச் சொல்லுங்கள்' - கவனிக்க மறந்த கதைகள்; கள ஆய்வு ரிப்போர்ட்

குடும்ப கஷ்டத்துக்காக நின்னுட்டிருக்கோம்:"காலையில எட்டு மணிக்கு வேலைக்கு வர்றோம். வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போறதுக்கு நைட்டு பத்து மணிக்கு மேல ஆயிடும். குறைந்தபட்சமா பார்த்தாலும் ஒரு நாளைக்கு 10 மணி ... மேலும் பார்க்க

Seeman: `தமிழ்நாட்டின் சாவர்க்கர் சீமான்..!' - திருமுருகன் காந்தி காட்டம்

கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கடலூரில் நடந்த ஒரு கட்சி கூட்டத்தின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான், பெரியாரின் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் குறித்து காட்டமாக பேசியிருந்தார்.இந்தப் பேச்சு பெரியாரிய... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: தேர்தல் அலுவலர் திடீர் மாற்றம்; பணியில் கவனக்குறைவா? பின்னணி என்ன?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் 17ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. 20ஆம் தேதி வேட்புமனு திரும்பப்... மேலும் பார்க்க