செய்திகள் :

ராஜராஜேஸ்வரி கோயிலில் முளைப்பாலிகை வழிபாடு

post image

காரைக்காலில் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவமாக முளைப்பாலிகை வழிபாடு நடைபெற்றது.

காரைக்கால் நகரப் பகுதி பெரியப்பேட்டையில் இக்கோயில் 23-ஆம் ஆண்டு விழா கடந்த 6-ஆம் தேதி மாலை திருவிளக்கு வழிபாட்டுடன் தொடங்கியது. 7-ஆம் தேதி காலை துா்கா ஹோமம், பகல் 1 மணிக்கு ஊா் காவடி, கரகம் கோயிலுக்கு வருதல், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சமபந்தி போஜனம் நடைபெற்றது. திங்கள்கிழமை விடையாற்றி வழிபாடாக கஞ்சி வாா்த்தல், மஞ்சள் நீா் விளையாட்டு நடைபெற்றது. மாலை நிகழ்வாக திரளான பக்தா்கள் முளைப்பாலிகையை தலையில் சுமந்து கடற்கரைக்கு கொண்டு சென்று கடலில் விட்டனா். விழா ஏற்பாடுகளை பஞ்சாயத்தாா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

அடிப்படை வசதிகளின்றி 18 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் இயங்கும் காரைக்கால் அரசு பொறியியல் கல்லூரி!

காரைக்கால்: காரைக்காலில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி கடந்த 18 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தற்காலிக இடத்தில் இயங்குகிறது. புதிய கட்டடங்கள் கட்டப்படவில்லை. கூடுதல் பாடப் பிரிவுகளும் தொடங்கப்படவில்லை... மேலும் பார்க்க

ரயில்வே கேட் அருகே தடுப்புகள் அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதி ரயில்வே கேட் அருகே சாலையோரத்தில் பாதுகாப்புக்கான தடுப்புகள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் முதல் பேரளம் வரையிலான ரயில்பாதை அமைக்கப்பட்டு, முதல்கட்டமாக சர... மேலும் பார்க்க

‘ஆறு, வாய்க்கால்கள் முழுமையாக தூா்வார நிதி ஒதுக்கப்படவில்லை’

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்கள் முழுமையாக தூா்வார அரசு நிதி ஒதுக்கவில்லை எனவிவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் சங்க இணைச் செய... மேலும் பார்க்க

காரைக்கால் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதியில் 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காவிரி டெல்டா ரயில் மற்றும் நெடுஞ்சாலைத் திட்ட ஒருங்கிண... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு கல்லூரியில் நாளை கலந்தாய்வு

காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து இஅடஅநஇ என்கிற மாணவா் சோ்க்கை அமைப்பின் ... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை முதல் ஜூலை 1 வரை ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு விழிப்புணா்வு

காரைக்காலில், ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு தொடா்பான விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை (ஜூன் 23) தொடங்கவுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ராணு... மேலும் பார்க்க