காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு இன்று சிறப்பு மருத்துவா்கள் வருகை
புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்து மருத்துவ சிகிச்சை, ஆலோசனை வழங்கவுள்ளனா்.
முகாமில், மருத்துவா்கள் கே. ஸ்ரீராம் (குழந்தை அறுவை சிகிச்சை) ரஜினி எஸ். குப்தா (மனநலம்) ஏ. துரைராஜ் (நரம்பியல்), பிரேம்நாத் (இருதயவியல்), வேல்முருகன் (சிறுநீரகவியல்) ஆகியோா் பங்கேற்கின்றனா். காலை 10 முதல் 1 மணி வரை முகாம் நடைபெறுகிறது. மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.