செய்திகள் :

ராஜஸ்தான் பொறுப்பு கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம்!

post image

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பொறுப்பு கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபில் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பொறுப்பு கேப்டனான ரியான் பராக்கிற்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. 3 போட்டிகளில் தலைமை வகித்த 23 வயதான ரியான் பராக் மெதுவாக பந்துவீசியதற்காக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிக்க: 1.78 கோடி பின்தொடர்வோர்.. இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி!

ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22 இன் கீழ், மெதுவாக பந்துவீசிய குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் முதல் மீறல் இதுவாகும்.

ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் இங்கிலாந்துக்கு எதிரான் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் விரலில் காயம் ஏற்பட்டது. அதனால் விரலில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதால் முதல் 3 போட்டிகளில் கீப்பிங், கேப்டன் பொறுப்பிலிருந்து சாம்சன் விலகியிருந்தார். மேலும், அவர் வருகிற 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மும்பை அணி லீக் போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு முதல் போட்டியில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்க காரணம் என்ன? ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்!

சச்சின் பதிவை 1,000 முறை படித்த ஷஷாங் சிங்..! இன்ஸ்டா பயன்பாட்டினை குறைக்க அறிவுறுத்திய கேப்டன்!

பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் யூடியூப் சேனலில் ஷஷாங் சிங் பேட்டியளித்துள்ளார். கடந்தாண்டும் சிறப்பாக விளையாடியதால் ஷஷாங் சிங் பஞ்சாப் அணியினால் ரூ.5.5 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். கடந்தாண்டு 354 ரன்கள், 164.... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரில் அசத்தும் தமிழன்..! சாய் சுதர்ஷனுக்கு குவியும் பாராட்டுகள்!

தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சின்னசாமி திடலில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக 4ஆவது அரைசதம் அட... மேலும் பார்க்க

பெங்களூரில் தோல்விக்குப் பிறகு ஆர்சிபி கேப்டன் பேசியதென்ன?

ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.அடுத்து விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை ம... மேலும் பார்க்க

ஆர்சிபிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருதுவென்ற சிராஜ் பேசியதென்ன?

பிஜிடி தொடருக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் முகமது சிராஜ் இந்திய அணியில் தேர்வாகவில்லை. அதனால் அந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகாக தயாராகி வந்ததாகக் கூறியுள்ளார். நேற்று சின்னசாமி திடலில் நடந்த தனது ம... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? பந்துவீச்சாளருக்கு பதிலாக நடிகரை திட்டித்தீர்க்கும் விராட் கோலி ரசிகர்கள்!

ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.அடுத்து விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெ... மேலும் பார்க்க

ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு முதல் தோல்வி

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏ... மேலும் பார்க்க