”ராஜ நாகம் என்பது ஓர் இனம் அல்ல..” - விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்த ஆச்சரிய தகவல்கள் என்ன?
ராஜ நாகம் என்பது ஓர் இனம் அல்ல என்று விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு European Journal of Taxonomy இதழில் வெளியிட்டதன் படி, ராஜநாகம் என்பது ஓர் இனம் அல்ல நான்கு தனித்தனி இனங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
லைஃப் சயின்ஸ் அறிக்கையின்படி, ராஜ நாகத்தின் முழுமையான டிஎன்ஏ பகுப்பாய்வு செய்யப்பட்டது. அந்த மரபணு ஆய்வின் நான்கு தனித்துவமான இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

153 மாதிரிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அவற்றின் செதில்கள், நிறம், பல் அமைப்பு, உடல் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதன்படி ராஜநாகம் ஓர் இனம் அல்ல நான்கு இனங்களின் வகைகளைக் கொண்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
வடக்கு கிங் கோப்ரா (ஓபியோபகஸ் ஹன்னா)
சுண்டா கிங் கோப்ரா (ஓபியோபகஸ் பங்காரஸ்)
மேற்கு தொடர்ச்சி மலைகளின் அரச நாகப்பாம்பு (ஓபியோபகஸ் காளிங்கா)
லூசன் கிங் கோப்ரா (ஓபியோபகஸ் சல்வடனா) என நான்கு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
லைவ் சயின்ஸில் வெளியிடப்பட்ட கௌரி சங்கர் மற்றும் அவரது குழுவினரின் கூற்றுப்படி , "தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் முழுவதும் உள்ள பிற தீவுகளில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத ராஜ நாக இனங்கள் இருக்கலாம். மற்ற உள்ளூர் இனங்களும் தனித்துவமான இனங்களா என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே ஆய்வு செய்து வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 188 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜநாகம் குறித்த ஆச்சரிய தகவல் வெளி உலகத்திற்கு வந்துள்ளது. ஆராய்ச்சி தொடர்கையில் மேலும் பல தகவல்கள் கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.