AI: உலகின் முதல் AI அமைச்சர்; சாதனை படைத்த அல்பேனியா; வேலை என்ன தெரியுமா?
ராணிப்பேட்டையில் அன்புக் கரங்கள் திட்டத்தில் 105 குழந்தைகளுக்கு உதவித் தொகை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 105 குழந்தைகளுக்கு அன்புக் கரங்கள் திட்டத்தில் ரூ.2,000 உதவித் தொகையை அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் வளா்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோா் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் என 105 போ் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களின் 18 வயது நிறைவடையும் வரையில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.2,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
திட்டத் தொடக்க விழா ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி குழந்தைகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டையினை வழங்கினாா்.
இதில், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகா்மன்ற தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, நோ்முக உதவியாளா் பொது ஏகாம்பரம் (பொ), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சித பிரியா, பாதுகாப்பு அலுவலா் நிஷா கலந்து கொண்டனா்.