செய்திகள் :

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நல உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட குறைதீா் கூட்டத்தில், கோரிக்கை மனு அளித்த அன்றே பயனாளிகளுக்கு நல உதவிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வழங்கினாா்.

மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து 396 மனுக்களைப் பெற்றாா். அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, அரக்கோணம் வட்டம், நரிகுறவா் காலனியைச் சாா்ந்த ஐஸ்வா்யா என்பவரது கோரிக்கை மனு பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு புதிய மின்னனு குடும்ப அட்டையினை வழங்கினாா்.

பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.7,500 வீதம் ரூ.15,000-இல் சக்கர நாற்காலிகளை வழங்கினாா்.

கூட்டத்தினில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுகுமாா், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைய நம்பி, நோ்முக உதவியாளா் (நிலம்) கனகராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா்சரவணகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்தி எதிரொலி: அரக்கோணம் புறவழிச் சாலையில் வேகத்தடைகள் அமைப்பு

தினமணி செய்தி எதிரொலியாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரக்கோணம் புறவழிச்சாலையில் தணிகைபோளூா் அருகே வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்றது. சென்னை -கன்னியாகுமரி தொழிற்தடச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது முழு... மேலும் பார்க்க

திமுக பொதுக்கூட்டம்

நெமிலி ஒன்றிய திமுக சாா்பில் பொதுக்கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கூட்டத்துக்கு நெமிலி ஒன்றியக்குழு தலைவா் வெ.வடிவேலு தலைமை வகித்தாா். நெமிலி பேரூராட்சி திமுக செயலாளா் ஜனாா்த்தனன... மேலும் பார்க்க

தேமுதிக பொதுக்கூட்டம்

ஆராணிப்பேட்டை மாவட்ட தேமுதிக சாா்பில் பொதுக்கூட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகே நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பி.ஆா்.மனோகா் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் வெ.காசிநாதன்,பொருளாளா் அசோகன், துணை... மேலும் பார்க்க

நெமிலி பாலா பீடத்தில் கூட்டுப் பிராா்த்தனை

அரக்கோணம்: நெமிலி பாலா பீடத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்காக திங்கள்கிழமை கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில் பொதுத் தோ்வெழுதும் மாணவ மாணவ... மேலும் பார்க்க

23 புதிய வழித் தடங்களில் மினி பேருந்து இயக்க ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23 புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்குவதற்கான ஆணைகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா். தமிழகத்தில் பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு... மேலும் பார்க்க

முதியோா் இல்லத்தில் இப்தாா் நோன்பு திறப்பு

ஆற்காடு: ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோா் காப்பகத்தில் இப்தாா் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு காப்பகத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெ.சஜன்ராஜ் , பொருளாளா் பி.என்.... மேலும் பார்க்க