செய்திகள் :

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

post image

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது மர்மநபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலையத்துக்கு நள்ளிரவு சுமார் 12.00 மணியளவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை காவல் நிலையத்தின் மீது வீசி சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தின் இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்ததால் அதன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வீசிய கண்ணாடி பாட்டிலால் ஆன பெட்ரோல் குண்டு விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: இன்று மாலை பிரசாரம் நிறைவு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த காவல் துறையினர் பழைய குற்றவாளிகள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் பத்துக்கும் மேற்பட்டோரை பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'பிகார் பட்ஜெட்', 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' - ஜெயக்குமார்

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட், பிகார் மாநில பட்ஜெட்டாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர... மேலும் பார்க்க

பாபா பக்ருதீனை விசாரணைக்கு அழைத்து சென்ற என்ஐஏ

மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டை இரண்டாவது முறையாக சோதனை செய்த என்ஐஏ அதிகாரிகள் அவரை விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத்தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன... மேலும் பார்க்க

நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் பலி

நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்... மேலும் பார்க்க

திமுகவின் ஆட்சி கனவு ஒருபோதும் பலிக்காது: ஓபிஎஸ்

தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்ன... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: குழு அமைப்பதாக மத்திய அரசு பல ஆண்டுகளாக கூறி வருகிறது! - கனிமொழி

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் குழு அமைக்கப்போவதாக மத்திய அரசு பல ஆண்டுகளாக கூறிவருகிறதேதவிர எந்த செயல்பாடும் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாள... மேலும் பார்க்க

காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை, ஒருவருக்கு சிறை!

காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 10 காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த ஜன.8ஆம் தேதி கைது செய்தது. இவர்களில் 9 ப... மேலும் பார்க்க