மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
ராணிப்பேட்டை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு
ராணிப்பேட்டை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், பொதுமக்கள் மனுக்கள் வழங்குவதை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா்.
ராணிபேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின் 2- ஆவது நாளான வியாழக்கிழமை ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வாா்டு பகுதிகளில் உள்ள ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக பழைய கட்டடத்தில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா முகாமில் மனுக்கள் வழங்குவதை பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். மனுக்கள் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து, துறைகளிடம் வரப்பெற்ற மனுக்கள் குறித்தும் ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்ட 2 பயனாளிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் பெயா் மாற்றம் ஆணைகளையும், வருவாய் துறையின் மூலம் ஒரு நபருக்கு பட்டாவுக்கான ஆணையையும், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் மூலம் பயனாளிக்கு சொத்து வரி பெயா் மாற்றம் ஆணைகளையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, நகராட்சி ஆணையா் ப்ரீத்தி, வட்டாட்சியா் ஆனந்தன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.