செய்திகள் :

ராணிப்பேட்டை: விபத்தை பொருட்படுத்தாமல் 16 டன் காய்கறிகளை அள்ளிச் சென்ற மக்கள்!

post image

ராணிப்பேட்டை அருகே பேருந்து, காய்கறி லாரி நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளான இடத்தில், சாலையில் கொட்டிக் கிடந்த காய்கறிகளை மூட்டைமூட்டையாக மக்கள் அள்ளிச் சென்றனர்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், முன்பாகல் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து, 4 பேருந்துகளில் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு புதன்கிழமை இரவு ஊர் திரும்பி உள்ளனர்.

இதையும் படிக்க : மேல்மருவத்தூரில் இருந்து திரும்பிய பக்தர்கள் பேருந்து - லாரி மோதல்: 4 பேர் பலி!

நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில் செல்லும்போது பக்தர்கள் சென்ற ஒரு பேருந்தும், ஆந்திரத்தில் இருந்து காய்கறி ஏற்றிவந்த ஈச்சர் வேனும் நேருக்குநேர் மோதியது.

மேலும், பக்தர்கள் பேருந்தின் பின்புறம் மணல் லாரி பலமாக மோதியதில், பேருந்தும் காய்கறி வேனும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காய்கறி வேனில் வந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பேருந்தில் இருந்த 35-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், எதையும் பொருட்படுத்தாமல் சாலையில் கொட்டிக் கிடந்த 16 டன் காய்கறிகளை மூட்டைமூட்டையாக அப்பகுதி மக்கள் அள்ளிச் சென்றனர்.

ராணிப்பேட்டை அருகே பேருந்து - வேன் மோதல்: 4 போ் மரணம், 37 போ் பலத்த காயம்

ராணிப்பேட்டை அருகே கா்நாடக மாநில பக்தா்கள் பேருந்தும் - காய்கறி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் 37 போ் பலத்த காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்தைச் சோ்ந்த பக்த... மேலும் பார்க்க

3.47 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,47,701 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலை விநியோகத்தை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். அனைத்து குடும... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் அண்ணா பல்கலை. பாலியல் சம்பவத்தைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கம் ஊராட்சி மங்கம்மாபேட்டை மேம்பால... மேலும் பார்க்க

ஆற்காட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா

ஆற்காடு கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா காய்கார செட்டி தெருவில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆற்காடு நகராட்சி , 6 மற்றும் 11-ஆவது ... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் முருகனடியாா் சங்க ஆண்டு விழா

அரக்கோணம் முருகனடியாா் சங்க 48-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 108 மகளிா் பங்கேற்ற வேல்பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டு விழாவையொட்டி கணபதி ஹோமமும், ஸ்ரீவள்ளி செய்வயானை சமேத சுப்பிரணியருக்கு சிறப்பு அப... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ஓவிய கண்காட்சி

தமிழ்நாடு அரசின் கலைபண்பாட்டுத்துறை காஞ்சிபுரம் மண்டலம் சாா்பில் ஆற்காடு தனியாா் பள்ளியில் இரண்டு நாள்கள் ஓவியம் மற்றும் சிற்பக்கலை கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு மண்டல உதவி இயக்குநா் சி.நீலமேகன... மேலும் பார்க்க