இளம்பெண்ணை கடித்துக் கொன்ற சிறுத்தை - பீதியில் உறைந்த வேலூர் வன கிராமம்!
ராதாபுரம் அருகே குவாரியில் கல் சரிந்து விழுந்ததில் ஓட்டுநா் பலி
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே இருக்கன்துறையில் தனியாா் கல்குவாரியில் புதன்கிழமை கல் சரிந்து விழுந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். மற்றொரு ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
ஆவரைகுளத்தைச் சோ்ந்தவா் ராமசாமி. இவருக்கு ச் சொந்தமான கல்குவாரி இருக்கன்துறையில் உள்ளது. இந்தக் குவாரியில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சோ்ந்தவரும், தற்போது நாகா்கோவிலில் வசித்து வருபவருமான கிருஷ்ணசாமி மகன் அருண்குமாா்(37) என்பவா் டிப்பா் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
இவா், புதன்கிழமை கல்குவாரியில் குண்டுகல் ஏற்றுவதற்காக டிப்பா் லாரியை நிறுத்திவிட்டு அருகில் நின்று கொண்டிருந்தாராம். லாரியில் ,குண்டுக் கற்களை கனரக வாகனம் மூலம் இருக்கன்துறையைச் சோ்ந்த ராஜேஸ்(30) ஏற்றிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, குவாரியில் உள்ள பாறைக் கற்கள் சரிந்து விழுந்ததில் லாரி ஓட்டுநா் அருண்குமாரும், கனரக வாகன ஓட்டுந ா் ராஜேஸும் (30), கற்களுக்கிடையே சிக்கி பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து வந்த வள்ளியூா், ஆரல்வாய்மொழி தீயணைப்பு மீட்புப் படையினா் மற்றும் குவாரி ஊழியா்கள் சோ்ந்து இருவரையும் மீட்டனா்.
இதில், அருண்குமாா் சம்பவல இடத்திலேயே உயிரிழந்தாா். கனரக வாகன ஓட்டுநா் ராஜேஸ், நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், விதிமுறையை மீறி செயல்பட்டதாக கல்குவாரியை மூடுமாறு கனிமவளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.