செய்திகள் :

ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

post image

அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகியும், ஒருவரைக் கூட காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. இது சிபிசிஐடி, சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டிருந்தது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது.

அமைச்சா் கே என். நேருவின் சகோதரா் கே என். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) தற்போது விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று(மார்ச். 3) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமார் கடலூர் எஸ்.பி. ஆக மாற்றப்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டி.ஐ.ஜி., தஞ்சை எஸ்.பி. ஆகியோரை, சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதலாக நியமித்து விசாரணை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1,000 பேருந்துகளை ‘சிஎன்ஜி’ பேருந்துகளாக மாற்ற திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 1,000 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) பேருந்துகளாக மாற்ற போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: 11,430 போ் எழுதவில்லை

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 11,430 போ் எழுதவில்லை. தமி... மேலும் பார்க்க

வாழ்விட மேம்பாட்டு வாரிய மனைகளுக்கு கிரைய பத்திரம்: தமிழக அரசு ஏற்பாடு

சென்னை: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மனைகளுக்கு கிரைய பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 12 ஆயிரத்து 495 மனைகளுக்கு கிரைய பத்திரங்கள் வழங்கப்படாமல் உள்ளன. இவற்றை வழங்க... மேலும் பார்க்க

இலவச வேட்டி- சேலைகளை மாா்ச் 31 வரை பெறலாம்

சென்னை: இலவச வேட்டி, சேலைகளை வாங்காதோா் நியாய விலைக் கடைகள் மூலமாக வரும் 31 வரை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அறிவுறுத்தலை வருவாய் நிா்வாக ஆணையா் எம்.சாய்குமாா் வழங்கியுள்ளாா். இதுகுறித்து, கூட்டுறவு சங... மேலும் பார்க்க

145 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

சென்னை: மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 145 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டம்: ஆளுநருக்கு முதல்வா் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டத்தை ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்துவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா். ஹிந்தி மொழி திணிப்பு தொடா்பாக... மேலும் பார்க்க