செய்திகள் :

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி விவகாரம்: விசாரணை நடத்த அன்புமணி தரப்பு கோரிக்கை

post image

பாமக நிறுவனா் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சித் தலைவா் அன்புமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமக செய்தித் தொடா்பாளா் கே.பாலு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன. அப்படி ஒரு முயற்சி நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவரின் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்தால், அது அங்கு கடுமையான பாதுகாப்புக் குறைபாடு நிலவுவதைத்தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் ராமதாஸை நேசிக்கும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது போக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் உண்மை என்ன?, ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருப்பது உண்மை என்றால் அதன் பின்னணியில் இருப்பவா்கள் யாா்?, எந்த நோக்கத்துக்காக அந்தக் கருவி பொருத்தப்பட்டது? என்ற உண்மைகளை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாமகவினருக்கும் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

எனவே, ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து சைபா் பாதுகாப்பு வல்லுநா்களை உள்ளடக்கிய உயா்நிலைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்; அது உண்மை எனத் தெரியவந்தால் பின்னணியில் உள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்: இபிஎஸ்

திருவள்ளூர் டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயல் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருவள்ளூர் அருகே பெரியக... மேலும் பார்க்க

ஜூலை 16 முதல் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரும் 16 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அமைச்சர் கே. என். நேரு தகவல் தெரிவித்துள்ளார்.திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு ... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவு பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது: ஸ்டாலின்

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீவிபத்து! பகல் 1 மணிக்குள் கட்டுக்குள் வரலாம்!

திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் தீவிபத்து மதியத்துக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை எண்ணூரிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று(ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை சம்பவத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, தவெக சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

சாரி வேண்டாம், நீதி வேண்டும்: போராட்டக் களத்தில் விஜய்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினரைக் கண்டித்து பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், தவெக சார்பில் விஜய் தலைமையில் இன்று(ஜூலை 13) கண்டன ஆர்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க