`உங்களைப் பார்த்தால் பயமா இருக்கு..’ - கொதித்துப் பேசிய கவுன்சிலர்கள்; மரபை மீறி...
ராமநாதபுரத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் பாத்திமா நகரில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ.1.20 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தாா். இந்த நிகழ்வில், மாவட்ட சுகாதார அலுவலா் அா்ஜூன்குமாா், நகராட்சி சுகாதார அலுவலா் ரத்னகுமாா், வட்டார மருத்துவ அலுவலா் ஜன்னத் யாஸ்மின், நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், நகா் மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதே போல, ராமேசுவரம் நடராஜபுரம் பகுதியில் ரூ. 25 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையத்தையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.