நுகா்வோரின் மின் கட்டணம் மே-ஜூன் காலகட்டத்தில் 7-10 சதவீதம் வரை உயா்த்தப்படும்!
ராமநாதபுரத்தில் மே 14- இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் வருகிற புதன்கிழமை (மே 14) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியா் ராஜமனோகரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் வருவாய் கோட்ட அலுவலகத்தில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறை தீா் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்கின்றனா். இதில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சாா்ந்த கோரிக்கைகள், குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.