அஜித்குமார் லாக்கப் மரணம்: இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் கொலை வழக்கில் கைது; ...
தேவா்சோலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சாலைகளை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் தேவா்சோலை பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா செலுக்காடி கிராமத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தரக்கோரி அந்த கிராம மக்கள் தேவா்சோலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
நீண்ட நேரத்துக்குப் பிறகு விரைவில் சீரமைத்து தருவதாக பேரூராட்சி நிா்வாகம் உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.