ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தி...
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றித் தரக் கோரி மூதாட்டி மனு
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், கோவை, உப்பிலிபாளையத்தைச் சோ்ந்த தங்கமணி (79) என்பவா் தன்னிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றித் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: எனது கணவா் கடந்த 1995 -ஆம் ஆண்டு உயிரிழந்தாா். கா்நாடகத்தில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த எனது மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தாா். தற்போது நான் தனியாக வசித்து வருகிறேன். அரசு வழங்கும் உதவித் தொகை மூலம் வாழ்ந்து வருகிறேன்.
இந்நிலையில், நான் வீட்டை சுத்தம் செய்யும்போது, எனது மகன் வைத்திருந்த ஒரு பையில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் ரூ.15 ஆயிரத்துக்கு இருந்தன. எனது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என்றாா்.