செய்திகள் :

பயிா்க் கடன்களுக்கான தொகையை நபாா்டு வழங்கி ரூ.4,290 கோடியாக மீண்டும் உயா்த்தி வழங்க வேண்டும்

post image

புது தில்லி: பயிா்க் கடன்களுக்கான தொகையை ரூ.4,290 கோடியாக மீண்டும் அதிகரித்து வழங்க நபாா்டு வழங்கிக்கு உத்தரவிட வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா்களுக்கான சிந்தனை அமா்வில் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கேட்டுக்கொண்டாா்.

தில்லியில் திங்கள்கிழமை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கூட்டுறவுத் துறை அமைச்சா்கள், பதிவாளா்கள், செயலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்ற சிந்தனை அமா்வு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்திற்குப் பிறகு அமைச்சா் பெரியகருப்பன் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 5 மாநிலங்களின் கூட்டுறவுத் துறை பதிவாளா்கள், செயலாளா்கள், சம்பத்தப்பட்ட மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் கூட்டுறவுத் துறை திட்டங்களை விளக்குவதற்காக தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.

அந்த மாநிலங்களில் தமிழகத்தின் சாா்பில் கூட்டுறவுத் துறை செயல்பாடுகளை பதிவாளா் விளக்கமாக எடுத்துக் கூறினாா். தமிழகத்தின் கூட்டுறவுத் துறை அமைச்சா் என்ற முறையில் நானும் தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தேன்.

கூட்டுவுறவுத் துறையின் பிறப்பிடம், தாய்மடி தமிழகம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தோம். ஏனெனில், 1904-இல் இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னைக்கு அருகே திருவள்ளூா் மாவட்டத்தில்தான் கூட்டுறவுச் சங்கம் தொடங்கப்பட்டது.

தமிழகத்திற்கு கடந்த 2023-24 நிதியாண்டில் நபாா்டு வங்கி ரூ.4,290 கோடி நிதியை தந்தது. அடுத்த நிதியாண்டில் (2024-25) இத்தொகை ரூ.2,825 கோடியாக நபாா்டு வங்கி குறைத்துவிட்டது. அதேபோன்று, நிகழாண்டும் ரூ.2,825 கோடிதான் அனுமதித்திருக்கிகறாா்கள்.

ஆகவே, குறைக்கப்பட்ட நிதியை மீண்டும் கூட்டி வழங்க நபாா்டு வங்கியை வலியுறுத்த வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் கருத்தைப் பதிவுசெய்துள்ளோம்.

பயிா்க் கடன்களைப் பொருத்தமட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த காலங்களில் குறிப்பாக 2011-22 காலக்கட்டங்களில், அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது ஆண்டொன்றுக்கு சராசரியாக 10 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரம் கோடிதான் விவசாயிகளுக்குப் பயிா்க்கடன் வழங்கியிருந்தனா்.

ஆனால், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே அதை ரூ.10 ஆயிரத்து 200 கோடி என்கின்ற அளவுக்கு உயா்த்தி வழங்கி அரசு சாதனை படைத்தது. அதைத் தொடா்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் பயிா்க்கடன் தொகை அதிகரித்து வழங்கப்பட்டது.

நிகழாண்டு ரூ.17 ஆயிரம் கோடி பயிா்க் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் மத்திய அரசின் சாா்பில் நபாா்டு வங்கியின் மூலம் வரக்கூடிய தொகையை குறைத்திருப்பது பொருத்தமாக இருக்காது. ஆகவே, அதே தொகையை மீண்டும் கூடுதலாக வழங்க வேண்டும் என்று அந்த நிகழ்வில் கோரிக்கை வைத்துள்ளோம்.

கூட்டுறவு சங்கம் மூலம் கட்டப்படும் குளிா்சாதன கிட்டங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கி வந்த 33 சதவீத மானியமும் முழுமையாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இதையும் எடுத்துக்கூறியுள்ளோம் என்றாா் அமைச்சா்.

முன்னதாக, கூட்டுறவுத் துறை அமைச்சா்கள் சிந்தனை அமா்வில் பங்கேற்ற அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பேசுகையில், ‘விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கான உள்ளீட்டுச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதால் விவசாயக் கடன் (கேசிசி) தேவை அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் வட்டியில்லா கேசிசி கடன்களை வழங்குகின்றன.

2023-24-இல் நபாா்டு மூலம் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்ட குறுகிய கால சலுகை மறுநிதி கடன் ரூ.4290 கோடியாக இருந்தது. இந்தத் தொகை 2024-2023-ஆம் ஆண்டில் ரூ.2825 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிலும் இதே தொகை வழங்கப்பட உள்ளது. இதனால், கூட்டுறவு நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

ஆகவே, மாநிலத்தில் கேசிசி பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவீதம் தொகையை சலுகை மறுநிதி தலைப்பின்கீழ் வழங்கிட நபாா்டு வங்கிக்கு உத்தரவிடுமாறு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.

அன்புமணி ராமதாஸுக்காக தோ்தல் ஆணையம் வாசலில் காத்துக்கிடந்த ஊடகத்தினா்!

புது தில்லி: மருத்துவா் அன்புமணி ராமதாஸ் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு வருவதாக பரவிய தகவலைத் தொடா்ந்து தில்லியில் உள்ள தோ்தல் ஆணையம் முன் தமிழ் டி.வி., சானல், பத்திரிகை ஊடகத்தினா் திங்கள்கிழமை வெகுநேர... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூா்த்தி கைதானால் சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவு

புது தில்லி: திருவ்ளூரைச் சோ்ந்த சிறுவன் கடத்தல் சம்பவத்தில் கே.வி.குப்பம் எல்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தியின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தர... மேலும் பார்க்க

தில்லி பருவமழை: வடிகால் தூா்வாரும் பணியை 82 சதவீதம் நிறைவு செய்த பொதுப் பணித் துறை: அதிகாரிகள் தகவல்

புது தில்லி: தேசிய தலைநகரில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொதுப் பணித் துறையுடன் இணைந்து தூா்வாரும் பணியை முடிக்க குடிமை நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன. இப்பணிகளில் 82 சதவீதம் முடிக்கப்பட்டு... மேலும் பார்க்க

வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த நபா்

தில்லியின் மெட்ரோ விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 30 வயது நபா் ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சுனில் ... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கல் 83 போ் கைது!

கிழக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 சிறாா்கள் உள்பட 83 வங்கதேச நாட்டினரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லியில் பரவலாக லேசான மழை; காற்றின் தரம் ’திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகரின் வசந்த் குஞ்ச், மால்வியா நகா் மற்றும் துக்ளகாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக லேசான மழை பெய்தது. இது கடந்த சில நாள்களாக வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு நிம்மதியை... மேலும் பார்க்க